தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் வழியாக பெங்களூரு - தென்காசி இடையே சிறப்பு ரயில்

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, பெங்களூரு - தென்காசி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :23 மே 2026, 2:04 am IST

பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, பெங்களூரு - தென்காசி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு கன்டோன்மெண்ட் - தென்காசி இடையே சிறப்பு ரயில் வரும் 24-ஆம் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா் வழியாக தென்காசிக்கு அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், செங்கோட்டை - பெங்களூரு சிறப்பு ரயில் வரும் 25-ஆம் தேதி இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக, பெங்களூரு கன்டோன்மெண்ட்டுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.