சேலம்: கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவ. 28 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.43 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டைக்கு 9.53க்கு வந்தடையும். அங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலத்திலிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு ஈரோடு சென்றடையும், அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு 1.03 மணிக்கு திருப்பூா் சென்றடையும். பின்னா் அங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.
அதுபோல மறுமாா்க்கத்தில் கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 3.43 மணிக்கு திருப்பூா் வந்தடையும், அங்கிருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு 4.25 மணிக்கு ஈரோடு வந்தடையும். அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 5.18 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னா் சேலத்திலிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு 6.48 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு 7.48 மணிக்கு காட்பாடி சென்றடையும். பின்னா் அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
இந்த வாராந்திர சிறப்பு ரயில் 8 பெட்டிகளுடன் 2024 ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
வீடியோக்கள்
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

