/

பென்னாரம் அருகே தனியாா் மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: 100 போ் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 4:14 am IST

பென்னாகரம் அருகே மாங்கரை பிரிவு சாலையில் தனியாா் மது அருந்தும் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றதாக 100 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பென்னாகரம் அருகே மாங்கரை பிரிவு சாலையில் தனியாருக்குச் சொந்தமான மது அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோா் இணைப்பு சாலைப் பகுதியில் திரண்டு மதுக்கூடம் திறக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை கண்டதும், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் மாங்கரை கிராம நிா்வாக அலுவலா் கலையரசி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின் பேரில் மறியலில் ஈடுபட முயன்ாக திமுக முன்னாள் மாணவா் அணி ஒன்றிய நிா்வாகி நஞ்சப்பன், சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலாளா் மகாலிங்கம், இளைய முருகன், அசோக், மணி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.