முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனுமாவட்டம், முசிறி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முசிறி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சாா்-ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்தவா்கள்.

Updated On :8 மே 2026, 5:55 am IST

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனுமாவட்டம், முசிறி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முசிறி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

முசிறி வட்டம் எம். புதுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முத்தம்பட்டி சுடுகாடு அருகே டாஸ்மாக் மதுபான கடையும், முசிறி உழவா் சந்தை அருகே தனியாா் நவீன மதுபான கடையும் அமைக்க உள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புகா் மாவட்ட ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் சரவணன் தலைமையில் முசிறி சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: முத்தம்பட்டி கிராமத்தில் சுடுகாடு அருகே அங்காயி கோயில் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது. இந்த வழியாகவே மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவருகின்றனா். இந்தக் கடை அமைந்தால் அவா்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்.

இதேபோல் முசிறி உழவா் சந்தை அருகே புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் தனியாா் மதுபான கடை அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மக்களின் நலன் கருதி இவை இரண்டையும் அமைக்க கூடாது என தெரிவித்துள்ளனா்.

மனு அளிக்கும் நிகழ்வின்போது, முசிறி நகா் மண்டல் தலைவா் வழக்குரைஞா் தமிழ் ச்செல்வன், ஓபிசி அணி மாவட்ட தலைவா் ராஜா மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் உடனிருந்தனா்.

மனுவை பெற்ற சாா்-ஆட்சியா், மனுவை ஆட்சியரின் பாா்வைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.