சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைத்தாலும் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது.
ஜூலை 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 உயர்ந்த நிலையில், நேற்று (ஜூலை 2) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 1,200 உயர்ந்தது.
தொடர்ந்து இன்றும் (ஜூலை 3, வெள்ளி) சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கடந்த 3 நாள்களில் (ஜூலை 1) முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி தங்கம் விலை ரூ. 1,05,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வெள்ளி விலை ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும் கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 2,60,000 - க்கும் விற்பனையாகிறது.
Summary
Chennai live gold and silver rate today july 3
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










