முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிரிப்பு சரவெடியில் கட்டாகுஸ்தி 2: திரை விமர்சனம்

கட்டாகுஸ்தி 2 திரைப்படத்தின் விமர்சனம்...

News image

கட்டாகுஸ்தி 2 போஸ்டர்

Updated On :3 ஜூலை 2026, 9:50 am IST

கட்டாகுஸ்தி 2: திரைவிமர்சனம்

2/5

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டாகுஸ்தி 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, மோக்ஷா, சாரா, கருணா, காளி வெங்கட், முனீஸ் காந்த், கருணாகரன் என பலர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது கட்டா குஸ்தி 2 திரைப்படம். ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது 2ஆம் பாகம் திரைப்படமாக இதனை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இதில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, அவரின் வீட்டுக் கணவராக விஷ்ணு விஷால், பள்ளி ஆசிரியராக மோக்ஷா நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கட்டா குஸ்தி முதல் பாகத்தில் மல்யுத்த பெண்ணாக இருப்பதை மறைத்து விஷ்ணு விஷாலை திருமணம் செய்த ஐஸ்வர்யா அதை மறைக்க படும்பாடும், அது தெரிய வந்த பிறகு நடந்த சம்பவங்களை ரசிக்கும்படியாக கொடுத்திருந்தார் இயக்குநர் செல்லா.

இந்த இரண்டாம் பாகத்தில் தனது மனைவியை எப்படியாவது சாம்பியன் ஆக மாற்றி விட வேண்டும் என அவருக்கு வீட்டிலிருந்து உதவுகிறார் விஷ்ணு விஷால். கணவரின் உதவியுடன் மல்யுத்த போட்டிகளில் விளையாடி வரும் ஐஸ்வர்யா அங்கு தனது பயிற்சியாளரையே எதிரியாக எதிர்கொள்கிறார்.

Listicle image

ஐஸ்வர்யா மல்யுத்தம் செய்வதை விரும்பாத அவரது பயிற்சியாளர் விஷ்ணு விஷாலையே ஏமாற்றி அதை செயல்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் பயிற்சியாளரின் அறிவுறுத்தலில் விஷ்ணு விஷால் செய்யும் ஒரு காரியம் ஐஸ்வர்யாவின் மல்யுத்த கனவை தகர்க்கிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே கட்டாக்குஸ்தி திரைப்படத்தின் கதை.

முதல் பாதியில் கொடுத்திருந்த அதே பொருத்தமான நடிப்பை நடிகர் விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யாவும் கொடுத்துள்ளனர். இந்திய சமூகத்தில் எப்போதும் விற்பனையாகும் கணவன் மனைவி காமெடிகள் இந்தப் படம் முழுக்க இடம்பெற்று இருப்பது திரைப்படத்தை இறுதிவரை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல உதவி இருக்கிறது. மல்யுத்த வீராங்கனையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அதற்கான உடல் மொழிகளில் கவனம் ஈர்க்கிறார்.

தனது குழந்தையை சரிவர வளர்க்கத் துடிக்கும் இடங்களில் அவரது எமோஷன் கலந்த நடிப்பு ரசிக்கச் செய்கின்றன. இவர்களுடன் குழந்தையாக நடித்து இருக்கும் சிறுமி சாராவின் கதாபாத்திரம் செயற்கைத்தன்மை சற்று தூக்கலாகவே எழுதப்பட்டுள்ளது. பிடிவாதம் பிடிக்கும் இடங்களில் சுட்டிக் குழந்தையாக அவர் தெரிந்தாலும் அவரது சில அதீதமான வசனங்கள் நாடகத் தன்மையுடன் உள்ளன.

மீனு டீச்சராக வரும் மோக்ஷா தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் வரும் கவர்ச்சிகரமான ஆசிரியர் கதாபாத்திரம் செய்திருக்கிறார். மீனு டீச்சராகவே அறியப்பட இனி அதிக வாய்ப்புகள் அவருக்கு உள்ளன. தமிழில் 90களில் வெளியான திரைப்படங்களில் பள்ளிக்கூட ஆசிரியர் எப்படி காண்பிக்கப்பட்டாரோ அதையே சற்று மசாலா துள்ளலுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சமையல் போட்டியில் விஷ்ணு விஷாலை முத்தமிடுவது, குத்து பாடலுக்கு கட்டிப் பிடித்து ஆடுவது என வரும் காட்சிகள் கமர்சியல் படத்திற்கு உண்டானவை என்பதால் அவற்றில் லாஜிக்குகளை பற்றி கவலைப்படாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர்.

Listicle image

இத்துடன் நடிகர் கருணாஸ் வரும் காட்சிகள் அரங்கை அதிரச் செய்கின்றன. ஆணாதிக்கவாதியாக அவர் பேசும் வசனங்கள் கேலி செய்யப்பட்டிருப்பதும் அதை நகைச்சுவையாக அவர் கடத்தி இருப்பதும் படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. பெண்களைப் பற்றி ஆண்கள் பேசும் இடமும் ஆண்களைப் பற்றி பெண்கள் பேசிக் கொள்ளும் இடமும் ரசிக்க செய்கின்றன.

நீதிமன்ற காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன், மல்யுத்தப் போட்டியின் வர்ணனையாளராக வரும் யோகி பாபு ஆகியோரின் காட்சிகள் சிறியவையாக இருந்தாலும் நகைச்சுவைப் பட்டாசை வெடிக்க செய்துள்ளன.

நகைச்சுவை திரைப்படத்திற்கான திரைக்கதைக்கு வசனம் மிக முக்கியம் என்பதை உணர்ந்த இயக்குநர் அதற்காக மெனக்கெட்டு இருப்பது திரையில் தெரிகிறது. குடும்பங்கள் கலகலப்பாக கண்டு களிக்க கட்டா குஸ்தி 2 நம்பிக்கை தருகிறது. கேமரா, இசை ஆகியவை உதவிகரமாக உள்ளன. படத்தின் ஆரம்பத்தில் வரும் சம்பவக்காரி பாடலை தவிர வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை.

Listicle image

படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை நம்பி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அதற்காக பல இடங்களில் லாஜிக் கிணறுகளை தாண்ட தவறி இருக்கிறது கட்டா குஸ்தி 2. அடுத்தடுத்து வரும் காட்சிகள் முன்கூட்டியே கணிக்க முடிவதால் ஒரு வித சுவாரசியமற்ற தன்மை இரண்டாம் பாதியில் தொற்றிக் கொள்கிறது.

பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது ஏன் அவசியம் என வரும் காட்சிகள் விவாதத்திற்கு உரியவை. பெண்கள் வலிமை என பேசும் அதே சமயம் அதற்கு பொருந்தாத காட்சிகளை அமைத்து இருப்பது படத்தின் போக்கை கேள்விக்குள்ளாக்குகிறது.

எனினும் இதுவரை ஏமாற்றம் கொடுத்த தமிழ் சினிமாவின் இரண்டாம் பாக கதைகளுக்கு மத்தியில் நகைச்சுவையாக நடத்திச் சென்று குடும்பங்களை ஈர்த்து வெற்றி பெற்றிருக்கிறது கட்டா குஸ்தி 2. ஜாலியாக கலகலப்பாக கண்டு களிக்க கட்டாகுஸ்தி குடும்பங்களுக்கான நல்ல சாய்ஸ்.

Summary

The movie Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.