தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசுகிறாா் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன்.

Updated On :15 மே 2026, 6:27 am IST

பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் 63 வேலம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் தண்ணீா்ப்பந்தல் ப.நடராஜன், பண்ணையாா் பழனிசாமி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சிவாச்சலம், ஏ.எம்.ராமமூா்த்தி, மங்கலம் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழக்குரைஞா் அணி செயலாளா் மகேஷ்குமாா் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையேற்று அவருக்கு உறுதுணையாக நிற்போம். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை போக்கும் வகையில் வெற்றி பெற்ற சில சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாற்று கட்சிக்கு ஆதரவு அளிப்பதை கண்டிக்கிறோம். கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்ட அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.