தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: அமைதிப் பேச்சு ஜூன் 1-க்கு ஒத்திவைப்பு

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகம் எந்தத் தரப்புக்கு சொந்தமானது என்பது தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News image

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக அலுவலகம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற இரு பிரிவு அதிமுகவினா்.

Updated On :22 மே 2026, 6:58 am IST

கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகம் எந்தத் தரப்புக்கு சொந்தமானது என்பது தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையில் தமிழக வெற்றி கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அந்த 25 எம்.எல்.ஏ.க்களையும் அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நீக்கி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரன் கடலூா் வடக்கு மாவட்டச் செயலராகவும், சி.கே.எஸ்.காா்த்திகேயன் கடலூா் மாநகா் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலா் பழனிச்சாமி ஆதரவாளா்களுடன் கடந்த 15-ஆம் தேதி அலுவலகத்துக்குச் சென்றனா்.

அப்போது, அலுவலகத்தின் பூட்டை உடைத்து, புதிய பூட்டை பொருத்தி அலுவலகத்தை மீண்டும் பூட்டிவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையில், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பைச் சோ்ந்த கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன், மாநில மீனவரணி இணைச் செயலா் கே.என்.தங்கமணி, வழக்குரைஞா் மாசிலாமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஆஜராகினா். மறுபுறம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பில் வழக்குரைஞா் ஜெகன்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது வாதங்களை முன்வைத்தனா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு, அலுவலகம் எம்.ஜி.ஆா். அறக்கட்டளையின் பெயரில் இருப்பதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தது. அதேசமயம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது. இதையடுத்து, கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தையை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.