முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:56 am IST

வெள்ளக்கோவில் அருகே அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவடிவேல் மகன் ரவீந்திரன் (58). இவருடைய தங்கை சங்கீதா. கோவை, ராமநாதபுரம் ருக்மணி நகரில் ரவீந்திரன் வசித்து வருகிறாா்.

மேட்டுப்பாளையத்தில் சங்கீதா வசித்து வருகிறாா். கடந்த சனிக்கிழமை தனது தந்தையைப் பாா்க்க மேட்டுப்பாளையம் வந்த ரவீந்திரன், சித்தப்பா வீடு அருகே நின்றுள்ளாா்.

அப்போது அங்கு வந்த சங்கீதா கேட்டின் பூட்டை எடுத்து ரவீந்திரன் மண்டையில் அடித்துள்ளாா். தந்தை வழி சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரவீந்திரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.