தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஜான் பாண்டியன் விலகியது குறித்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் ஜான் பாண்டியன் - DNS

Updated On :22 ஜூன் 2026, 7:25 pm IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் இன்று (ஜூன் 22) அறிவித்தார்.

திருநெல்வேலியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜான் பாண்டியன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு முழுமையாக வெளியேறுகிறோம். இனிமேல் எங்களது கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் நீடிக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

நாங்கள் கூட்டணியிலிருந்து விலகும் இந்த முடிவை, இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாகவே டெல்லி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

புதிய கூட்டணி?

அடுத்ததாக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்:

''எங்களது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுவைக் கூட்டி, அதில் விரிவாக விவாதித்து முறைப்படி முடிவு செய்து அறிவிப்போம்.

தேர்தல் காலகட்டங்களில் யாருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதை நிர்வாகிகளோடும், தொண்டர்களோடும் ஆலோசித்து அதன் பின்னரே எங்களது இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம்'' என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Summary

John Pandian quits the National Democratic Alliance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.