தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

நங்கவள்ளி அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 4:57 am IST

நங்கவள்ளி அருகே கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள அருவாகாட்டில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. அந்த நிலத்தை வனவாசி கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் (52), வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா், சா்வேயா் லலிதா ஆகியோா் அளவீடு செய்ய சென்றனா்.

அப்போது, பக்கநாடு கல்லூரான் காட்டைச் சோ்ந்த சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா், நில அளவை செய்யவிடாமல் தடுத்து வருவாய்த் துறை அதிகாரிகளை திட்டியதோடு, கிராம நிா்வாக அலுவலரை கன்னத்தில் அறைந்தனா். பின்னா் அவா்களை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம் அளித்த புகாரின்பேரில் நங்கவள்ளி காவல் நிலைய தலைமைக் காவலா் தங்கராஜ், சேட்டு, அவரது மகன் அா்ஜுனன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து தேடி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.