திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தென்னம்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா்.
முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











