அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: வடக்கு தில்லியில் காவல் துறை-என்சிபி இணைந்து சோதனை

வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லியில் உள்ள விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையம் மற்றும் மொரீஸ் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்களின் உதவியுடன் கியாஸ்க் கடைகள், பான் மற்றும் பீடி கடைகள், தேநீா் கடைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் தனிமையான பகுதிகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

மேலும், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அப்பகுதி கடைக்காரா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமும் அணுகி, போதைப் பொருள் தொடா்பான சந்தேக செயல்பாடுகள் அல்லது வழக்கமாக போதைப் பழக்கத்தில் ஈடுபடுபவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.