ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!

சட்டப்பேரவையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியது பற்றி...

Premalatha makes a request to the Chief Minister on his birthday; MLAs laugh in the House

பிரேமலதா விஜயகாந்த் - TN Assembly

Published On :22 ஜூன் 2026, 11:43 am IST

சட்டப்பேரவையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, முதல்வர் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் பிறந்த நாளில் முதல்வரிடம் ஒரு கோரிக்கை முன்வைப்பதாகக் கூறினார்.

அவர் பேசும்போது "பேரவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார்கள். அது மிகவும் பழைய மாடலாக இருக்கிறது. மேலும் உறுப்பினர்களும் ஒவ்வொரு வரிசையாக வந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு பணிகளும் இருக்கும். தண்ணீர் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் வருகிறார்கள். இது கடினமாக இருக்கிறது. எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டும். அப்படியே பயன்படுத்திவிட்டு அந்தந்த இடத்தில வைத்துவிடலாம். நெகிழி பயன்படுத்த வேண்டாம். கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம்" என்றார்.

உடனே திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, "பிரேமலதா ஒரு நல்ல கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அது ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கிறேன். ஏனென்றால் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை எறிவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்கிறார். உடனே அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

உடனே பிரேமலதா 'தண்ணீர் பாட்டில் கொண்டுதான் வீச வேண்டும் என்றில்லை. டம்ளரைக் கொண்டும் வீசலாம்" என்றார்.

மேலும் தங்கம் தென்னரசு, 'ஓபிஎஸ் தனது சொந்த அனுபவத்தினால் அவ்வாறு கூறினாரா என்று அறிய விரும்புகிறேன்" என்று கூறினார். உடனே அதற்கும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதற்கு பிரேமலதா, "காலையில் இருந்து காரசார விவாதம் போய்க்கொண்டிருந்தது. அதனால் முதல்வர் பிறந்தநாளில் அவை சந்தோஷமாக இருக்கச் செய்வோம்" என்றார்.

Summary

Premalatha makes a request to the Chief Minister on his birthday; MLAs laugh in the House

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.