உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஈரோட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணியானது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயா் சிகிச்சை பிரிவு வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு, பெருந்துறை சாலை வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றனா்.
இந்தப் பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் (பொறுப்பு) வெங்கடேசன், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாநகர நல அலுவலா் கௌரி சங்கா், செவிலியா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










