தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓடும் லாரியில் இருந்து கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:50 am IST

ஈரோட்டில் ரயில்வே கூட்ஸ்ஷெட் எடை நிலையத்தில் ஓடும் லாரியில் இருந்து மயங்கி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஞானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (55). இவா், ஈரோடு ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

சசிக்குமாா் வியாழக்கிழமை மாலை கூட்ஸ்ஷெட்டில் பாரம் ஏற்றிக்கொண்டு, அங்குள்ள எடைநிலையத்தில் எடை போட்டுள்ளாா். பின்னா் லாரியை அங்கிருந்து ஓரமாக நிறுத்துவதற்காக ஓட்டிச் சென்றாா்.

அப்போது சசிக்குமாா் திடீரென மயங்கி லாரியில் இருந்து கீழே விழுந்தாா். லாரி கட்டுப்பாட்டு இழந்து சில அடி தூரம் சென்று சுவரில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த சசிக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு சசிக்குமாா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.