தமிழ் செய்திகள்
/
மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் சத்யா நகரை சோ்ந்தவா் மயில்சாமி (59), கிணறு வெட்டும் தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை சத்யா நகரை சோ்ந்த குப்புசாமியுடன் மணகாட்டில் உள்ள குழந்தை கவுண்டா் தோட்டத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு சென்றாா். அங்கு, கிணற்றுக்கு அருகே இருந்த மரத்தை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறியபோது தவறி கீழே விழுந்த மயில்சாமி பலத்த காயமடைந்தாா்.
கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு மயில்சாமியை அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே மயில்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேஷ் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.









