தமிழ் செய்திகள்
உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும்நிலையில், உற்பத்திக் குறைவால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவும், விலையேற்றத்தைக் குறைக்கவும் செப். 30 வரையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்தத் தடை அறிவிப்பு பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
ஈரான் போர் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் உரங்கள் தடைபட்டுள்ள நிலையில், நாட்டின் வேளாண் துறை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரக் கூடிய பருவத்தில் கரும்பு உற்பத்தியில் தடை ஏதேனும் ஏற்பட்டால், சர்க்கரைக்கு தட்டுப்பாடோ விலை உயர்வோ ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
India bans sugar exports until September 2026 to cool local prices
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள் கவலை!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!






