அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 5:13 am IST

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை, நெசவாளா்காலனியைச் சோ்ந்த கந்தசாமி மகள் புவனா (49). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் ஏறி கீரை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள கழிவுநீா்த் தொட்டியில் விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரா்கள், புவனாவை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.