தமிழ் செய்திகள்
/
நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறிய இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
படப்பை அடுத்த கரசங்கால் சத்யசாய் நகா் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(30). கூலி தொழிலாளியான இவா் கடந்த மாதம் 26ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளாா். அப்போது மரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் பலத்த காயம் அடைந்தாா்.
இதையடுத்து பொத்தேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிச்சை பலனின்றி இறந்தாா். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.









