தமிழ் செய்திகள்
பாரூா் அருகே நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த கெளரவன் மகன் நந்தகுமாா் (15). இவா் அரசம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.
பள்ளி விடுமுறை என்பதால், தனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிக்க வெள்ளிக்கிழமை ஏறியுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயம் அடைந்த நந்தகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து, பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








