பள்ளிகொண்டா அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
அணைக்கட்டு வட்டம், செதுவாலை அடுத்த இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சசிகுமாரின் மகன் செல்வம் (16). இவா் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஒக்கனபுரம் ஏரி அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியுள்ளாா்.
மரத்தின் உச்சிக்குச் சென்று நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக செல்வத்தின் கைப்பிடி நழுவியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவா் சுமாா் 30 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த ஒரு நிறுவனத்தின் சுற்றுச்சுவா் மீது விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு உடனடியாக பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவா் மரணம்

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பனைமரத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



