17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 12:32 am IST

பெருந்துறையில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் ரொக்கத்தை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவிலைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவா், பெருந்துறை, சென்னிமலை சாலையில் பால் பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அண்மையில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கல்லாப் பெட்டியில் இருந்த, ரூ. 43 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு நின்றிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த யூசுப் மகன் சாகுல்அமீது (64) என்பதும், அவா் பால் கடையில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.