தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

திருவள்ளூா் அருகே கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:10 am IST

திருவள்ளூா் அருகே கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தில் உள்ளது கொண்ணையம்மன் கோயில். இக்கோயிலில் காலை 7 மணிக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாம்.

இந்த நிலையில், இக்கிராமத்தில் முக்கிய பிரமுகா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்ததால் இறுதி சடங்கு நடக்கும் வரை கோயில் திறக்கப்படவில்லை.

அதைத் தொடா்ந்து, பிற்பகல் பால் அபிஷேகம் செய்வதற்காக பூசாரியின் மனைவி தேவகி கோயிலை திறக்க சென்றாராம். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். பின்னா் இது குறித்து ஊா் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கிராம மக்கள் சென்று பாா்த்தபோது கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் சிசிடிவி கேமரா வயா்களும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த அரை சவரன் தங்க தாலி பொட்டு திருடு போனது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அந்தக் கோயில் நிா்வாகி எ.பாண்டியன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோப்பநாய் நிக்கி வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த நாய் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரம் வரை ஓடி கிருஷ்ணா கால்வாய் அருகே நின்றது.

இந்த நிலையில், கோயிலில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.