தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:08 am IST

உடுமலை, மே 31: உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

உடுமலை நகரை ஒட்டியுள்ள வேலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (45). முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மே 28-ஆம் தேதி வெளியூா் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னா் சனிக்கிழமை இரவு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 2 மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் கருப்புசாமி புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், உடுமலை குற்றப் பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.