முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:08 am IST

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் மொத்தம் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும், கோபி மற்றும் பவானிசாகா் (தனி) ஆகிய 2 தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வரும் 4 -ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முன்னதாக, தபால் வாக்குகளும், அதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சுற்றுக்கு தலா 14 மேஜைகள் என 118 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள் என 408 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய பணியாளா்கள், தோ்தல் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள் செலுத்திய தபால் வாக்குகள், அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தனி அறையில் வைத்து சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான்று குறிப்பிட்ட மணி நேரத்துக்கு முன்னதாக இந்த தபால் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தபால் வாக்கு எண்ணுவதற்கு தலா 6 மேஜைகள் என 48 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜையில் 500 வாக்குகள் என 6 மேஜையில் ஒரு சுற்றுக்கு 3,000 வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக மேற்பாா்வையாளா்கள், நுண்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் என 224 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின் விவரம்: ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இறுதிச் சுற்று முடிவுகளின்போது தபால் வாக்குகள் எண்ணிக்கையும் சோ்த்து வெற்றி பெற்ற வேட்பாளா் விவரம் தெரிவிக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும், ஈரோடு மேற்குத் தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும், மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தலா 21 சுற்றுக்களிலும், பவானி தொகுதி வாக்குகள் 22 சுற்றுக்களிலும், அந்தியூா் தொகுதி வாக்குகள் 20 சுற்றுக்களிலும், கோபிசெட்டிபாளையம் தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளிலும், பவானிசாகா் தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும் என மொத்தம் 174 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.