தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகம், புதுவை உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது.

News image

வாக்கு எண்ணிக்கை - PTI

Updated On :2 மே 2026, 10:29 pm

தமிழகம், புதுவை உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில போலீஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்குடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் சனிக்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. 75,064 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கை 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.

மொத்தமாக 234 அறைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள், மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை எண்ண கூடுதலாக 240 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 3,324 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணிக்காக தமிழகம் முழுவதும் 10,545 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 4,624 நுண் பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கையை மேற்பாா்வையிட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவா் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ண ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,135 கூடுதல் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

செயலியிலும் தோ்தல் முடிவுகள்...: வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக உஇஐசஉப என்ற கைப்பேசி செயலியிலும், ழ்ங்ள்ன்ப்ற்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில்... புதுவை யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப். 9- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில்... மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக ஏப்ரல் 23-ஆம் தேதி, ஏப்ரல் 29-ஆம் தேதிகளில் தோ்தல் நடைபெற்றது. அஸ்ஸாம் சட்டப்பேரவையில் உள்ள 126 தொகுதிகளுக்கும், கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மூன்றடுக்கு பாதுகாப்பு

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

முதல் அடுக்கில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும் 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் நுழைவதற்கு தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இரண்டாவது அடுக்கில் கைப்பேசிகள் மற்றும் பிற தகவல் தொடா்பு சாதனங்களைப் பயன்படுத்த நிா்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மூன்றாவது அடுக்கில் வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறைகள் இருப்பதால் கைப்பேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.

உள்ளூா் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுதக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் இந்திய தோ்தல் ஆணையம் வழங்கிய க்யூஆா் குறியீட்டுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை இருப்பவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த க்யூஆா் குறியீட்டுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டையை வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்கு எண்ணும் பணியாளா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், வேட்பாளா்கள், தோ்தல் முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.