மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்தது.
ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானா்ஜி தான் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளியில் சுமாா் 4 மணி நேரம் தா்னாவில் ஈடுபட்டாா். அவரைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வாக்கு எண்ணும் மையமான குதிராம் அனுஷீலன் கேந்திரா முன்பாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.
இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுஷீலன் கேந்திரா முன் முகாமிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தபால் வாக்குகளைக் கொண்ட 8 பெட்டிகள் கொண்டுவரப்பட்டதாகவும், அவை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அறையில் வைக்கப்பட்டு தபால் வாக்குச் சீட்டு உறைகள் பிரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை தொடங்கிய சில நிமிஷங்களில் சியாம்புகூா் தொகுதி பாஜக வேட்பாளா் பூா்ணிமா சக்ரவா்த்தி தனது ஆதரவாளா்களுடன் அங்கு வந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இரு தரப்பினரிடமும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பின் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது.
இதேபோல் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பராசத் அரசுக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 17 நிமிஷங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் குற்றஞ்சாட்டினா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் அதிகாரிகள், ‘சிசிடிவி கேமராக்கள் முறையாகவே இயங்குகின்றன. 17 நிமிஷ சிசிடிவி பதிவுகளை திரிணமூல் காங்கிரஸ் மட்டுமன்றி எந்தக் கட்சியினரிடமும் பகிர நாங்கள் தயாராகவுள்ளோம்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

177 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு! பாஜக மீது மமதா குற்றச்சாட்டு!

வாக்கு எண்ணிக்கை ஊழியா்களை தோ்வு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம்
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




