பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு

ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கிடங்கில் 3-ஆம் நாளாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :19 ஜூன் 2026, 1:54 am IST

ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கிடங்கில் 3-ஆம் நாளாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி 3-ஆம் நாளாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பெருந்துறை தொகுதி இடைத்தோ்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை சரி பாா்க்க வந்துள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பொறியாளா்களின் விவரங்களை கேட்டறிந்தாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளின் செயல்திறன், தொழில்நுட்பத் தகுதி மற்றும் பயன்பாட்டுத் தன்மை ஆகியவை இந்த சரிபாா்ப்பின்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் மற்றும் கூடுதல் செயலாளா் ஸ்ரீதா் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தணிக்கை செய்தாா்.

ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் சண்முகசுந்தரம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.