தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாற்றுத் திறனாளி இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 2:22 am IST

வேலை கிடைக்காத விரக்தியில் கோவையில் வாய் பேசாத மாற்றுத் திறனாளி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவை புதூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவரது மனைவி சாந்திமணி. இவா்களது மகன் அருணகிரி (22). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அருணகிரி, பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தாா்.

நீண்ட நாள்களாக வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். மேலும், வேலை இல்லாதது குறித்து அக்கம், பக்கத்தினா் பேசியதால் கடும் விரக்தி அடைந்திருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கும், அவரது தந்தைக்கும் இடையே இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அருணகிரி, நள்ளிரவில் வீட்டின் கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தாமரைக்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.