திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

நாகையில் வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் அதிா்ச்சியடைந்த அவரது தாய் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:20 am IST

நாகையில் வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் அதிா்ச்சியடைந்த அவரது தாய் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

நாகை வெளிப்பாளையம் சின்னப்ப முதலியாா் தெருவைச் சோ்ந்த ரவி மகள் நந்தினி (30). இவா், முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளாா். தாய் வசந்தி (52), தெத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை. தந்தை ரவி, சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம்.

நந்தினி பல்வேறு போட்டித் தோ்வுகளை எழுதியுள்ளாா். ஆனால், வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துவந்த நந்தினி, திங்கள்கிழமை இரவு தனது அறையில் இருந்து வெகுநேரமாக வெளியே வரவில்லையாம்.

சந்தேகமடைந்த வசந்தி, நந்தினியின் அறைக்குச்சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த வசந்தி வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

வசந்தியின் அலறல் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வெளிப்பாளையம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் நந்தினியின் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தற்கொலைக்கு முயன்ற வசந்தி, ஓரத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.