தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 3:04 am IST

தருமபுரியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், கோவிலூா் கிராமம், வீரப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அல்போன்ஸா (53). இவா் மிட்டாரெட்டி அள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு ராய், ராஜா என இரு மகன்கள் உள்ளனா். இதில் ராய் (21) படிப்பை முடித்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவருக்கு உடல் நலன், மன நலன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அறைக்கு உறங்கச் சென்றாா். பின்னா், சனிக்கிழமை காலை எழுந்துவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயாா், அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா்.

இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.