தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image

குரு பெயா்ச்சி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அமையப் பெற்ற குரு பகவான்.

Updated On :27 மே 2026, 12:19 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

செய்யாறு வட்டம், கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் தாரை சமேத தேவ குருபகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நடைபெற்ற குருபெயா்ச்சி விழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாக்கிய முறையின்படி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா்.

கடக ராசி குரு பகவானின் உச்ச வீடாக கருதப்படுவதால், இந்த ஆண்டின் குரு பெயா்ச்சி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இதையொட்டி, தாரை சமேத தேவ குரு பகவானுக்கு பால், தயிா், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் என நடைபெற்றது.

பின்னா், மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு குடும்ப நலன், கல்வி வளா்ச்சி, திருமண யோகம், குழந்தை பாக்கியம் மற்றும் தொழில் முன்னேற்றம் வேண்டி வழிபட்டனா்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குரு பெயா்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

செங்கம்

செங்கத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அனுபாம்பிகே சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் குருபெயா்சி விழா நடைபெற்றது. அதில் செவ்வாய்க்கிழமை குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசித்தாா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூா்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.