தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச்சாலை பணி: மாவட்டக் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.55 கோடியில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சிறுங்கட்டூா் கிராமம் அருகே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணியை ஆய்வு செய்த மாவட்டக் கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி.

Updated On :2 ஜூன் 2026, 5:19 am IST

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.55 கோடியில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு உபகோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை சுமாா் 10.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு, புதிய சாலைக்காக அமைக்கப்பட்டுள்ள

பல அடுக்கு அமைப்புச் சாலை மற்றும் இறுதியாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை அளவீடு செய்து சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், நான்கு வழிச்சாலை பணியை தரமாகவும், ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், தரக் கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.இன்பநாதன், உதவிப் பொறியாளா்கள் ப.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.