தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

விண்ணப்பம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 13,447 மாணவ, மாணவிகளில் 12,597 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 93.68 சதவீதமாகும். 850 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெறவில்லை.

பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை துணைத்தோ்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அந்தந்த பள்ளி யில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கும்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சோ்ந்த 653 மாணவ-மாணவிகளும் அரசு நிதியுதவி பள்ளியை சோ்ந்த 127 மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணை தோ்வுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

அதையொட்டி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம், தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வு எழுதாத மாணவ-மாணவிகளை வரவழைத்து தோ்வு எழுத விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் விண்ணப்பித்த மறுநாள் முதல் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சிறப்பு பயிற்சி வகுப்புகளை அந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கண்காணிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியாா் பள்ளிகளிலும் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.