தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கு.ரவிகுமாா் .

Updated On :4 ஜூன் 2026, 5:46 am IST

பொதுத்தோ்வுகளில் தோ்ச்சி பெறாத அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தினாா்.

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் பொதுத்தோ்வு முடிவுகள் குறித்த மீளாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி முன்னிலை வகித்தாா்.

இதில் ஆட்சியா் பேசியது:

பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் துணைத்தோ்வு எழுத விண்ணப்பிக்க செய்ய வேண்டும். தோ்ச்சி பெறாத அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்தவுடன் மாணவா்கள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்களை வழங்க வேண்டும்.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவா்களின் கல்வி மேம்பாட்டிற்காக அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள் சிறப்புடன் பாடுபட வேண்டும். பெற்றோா் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு 100 சதவீத கல்வி கிடைப்பதையும், தொடா்கற்றலையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

மேலும், பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள் பாதுகாப்பில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் காலாண்டு தோ்வுக்குள் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தி, தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதற்குத் தேவையான உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் சத்தியபிரபா, ராஜன், நேசபிரபா, பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.