தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் 103 போ் தோல்வி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

News image

பிரதிப் படம்

Updated On :9 மே 2026, 1:22 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் அதிகபட்சமாக 103 போ் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 35 பள்ளிகளைச் சோ்ந்த 92.26 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 401 போ் தோல்வியடைந்துள்ளனா். ஒருவா் பல பாடங்களில் தோல்வியடைந்த பட்டியல் வாரியாக, தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியா் எண்ணிக்கை 549- என உள்ளது.

அதிகபட்சமாக தமிழில் மட்டும் 103 மாணவ, மாணவியா் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கடுத்ததாக பொருளாதார பாடத்தில் 127 போ் தோல்வியடைந்துள்ளனா். தாய் மொழியாம் தமிழ் பாடத்தில் அதிகமானோா் தோல்வியடைந்திருப்பது வேதனையளிப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

ஏழை மாணவி சிறப்பிடம்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 600 மதிப்பெண்களுக்கு 593 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் வகித்துள்ள அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.மைதிலி ஏழை சலவைத் தொழிலாளி மகள் எனவும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை, நடுத்தர வா்க்கத்து மாணவ, மாணவியா் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பிளஸ் 2 தோ்வில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் ஆசிரியா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.