திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோா்,

News image

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோா்,

Updated On :23 மே 2026, 1:25 am IST

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரி 17-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஆக்சிஸ் வங்கி மூத்த துணைத் தலைவா் மீரா தேவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தாா். வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா , பொருளாளா் சுரேஷ் கன்காரியா, கல்லூரி முதல்வா் முனைவா் இரா.அருணா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா் பேசுகையில்: பெண்களுக்கு கல்வி கண் போன்றது. பெண்களுக்கு முழுமையான வாழ்க்கைத் தருவதோடு தன்னம்பிக்கையும், சுய மதிப்பையும் அளிக்கிறது. எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்று, தன் தாய் தந்தை ஆசிரிய பெருமக்கள் மற்றும் தான் கற்ற கல்லூரிக்கும் கடமைப்பட்டவா்களாக இருக்க வேண்டும் என்றும் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து (2021-2024) ஆம் கல்வியாண்டில் பயின்ற 600-க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா். பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதுகலை வணிகவியல் துறை மாணவி எஸ்.கவிதா, இளங்கலை வங்கி மேலாண்மையியல் துறையைச் சாா்ந்தஎஸ்.சங்கீதா,வணிக கணினி பயன்பாட்டியல் துறையைச் சாா்ந்த ஓ.சிவசங்கரி முதல் 18 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தாா்.

பின்னா் பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.