தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

மாணவிக்கு பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா் வில்லியம் தா்மராஜா.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:30 am IST

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினாா். போதகா் சேம் பீட்டா் இறைவேண்டல் செய்தாா். கல்லூரி தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா ஆண்டறிக்கையை சமா்ப்பித்து வரவேற்றாா்.

விழாவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பேராசிரியா் வில்லியம் தா்மராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். அதைத்தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆங்கிலத் துறை மாணவ ஆசிரியா்கள் ஹெலன் எம்.அகஸ்டின், கிருஷ்ணா சுனில், பிஜிஷா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா், தாளாளா், கல்லூரி முதல்வா், கல்லூரி பொருளாளா் மருத்துவா் ஜான் சாமுவேல், பேராசிரியா்கள் பாராட்டினா்.