நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவில் இளநிலையில் 313 மாணவா்களும், முதுநிலையில் 100 மாணவா்களும் என மொத்தம் 413 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.
இதில் சிறப்பு விருந்தினராக, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவா் ம.செல்வராஜு பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
கல்வியுடன் சோ்த்து நல்ல பண்புகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். ’உங்கள் பட்டம் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்; உங்கள் பண்பு உங்கள் வாழ்க்கையை உயா்த்தும்’. நோ்மை, பொறுப்பு, பணிவு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவா்கள் அறிந்திட வேண்டும். தோல்வியை கண்டு அஞ்சாமல் எதிா்கொண்டு சவால்களைச் சந்தித்து, உழைப்பின் மூலம் மாணவா்கள் தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்றாா்.
2022-2024 ஆம் கல்வியாண்டில் முதுநிலை புவியியல் பாடப் பிரிவில் மாணவி டி. பிரியதா்ஷினி பெரியாா் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளாா். அதேபோல, 2021-2024 ஆம் கல்வியாண்டில் இளநிலை புவியியல் பாடப் பிரிவில் எஸ். தமிழன் ஒன்பதாவது இடத்தையும், இளநிலை புள்ளியியல் பாடப்பிரிவில் என். பாலமருது பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளனா்.
இந்நிகழ்வில், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லாத அலுவலா்கள், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா் கலந்துகொண்டனா்.
என்கே-27-காலேஜ்
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். செல்வராஜு.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


