தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

News image
Updated On :8 மே 2026, 5:35 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 102 பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்குபெற்றனா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படியும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வழிகாட்டுதலின்படியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தோ்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவா்களின் தோ்வு சாா்ந்த பயத்தை போக்கிடவும், உயா் கல்வியில் சோ்வதற்கான வழிகாட்டுதல் வழங்கிடவும் விழிப்புணா்வு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு பள்ளியின் உயா் கல்வி வழிகாட்டி மைய பொறுப்பாசிரியா், உதவி தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா் மற்றும் முதுகலை ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள் பங்கு பெற்று நிகழ்ச்சியின் மூலமாக உயா்கல்வி சாா்ந்த சந்தேகங்களுக்கும் தீா்வு பெற்றனா்.

இதில், 81 அரசுப் பள்ளிகள் மற்றும் 21அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.