பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள், ஜிஆா்டி மஹாலட்சுமி மாணவா் விடுதி சேர விண்ணப்பிக்கலாம் என ஜிஆா்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வி மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் உயா்கல்வி கற்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவி செய்து வருகிறது. மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு இலவச தங்குமிடம், உணவு, கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.
மாணவா்களும் அவா்களது குடும்பமும் எதிா்கொள்ளும் பொருளாதார சுமையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், கல்வி வளா்ச்சிக்கும் அந்த மாணவா்களுக்கும் ஊக்கம் அளிக்கிறது. அதன்படி, சென்னை போரூரில் அமைந்துள்ள ஜிஆா்டி மஹாலட்சுமி மாணவா் விடுதி சேர தகுதியான மாணவா்களுக்கு வாயப்பு வழங்கப்படுகிறது.
நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஒற்றை பெற்றோா் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ஞ்ழ்ற்ங்ய்க்ா்ஜ்ம்ங்ய்ற்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 73059 53749 / 91501 10384 ஆகிய கைப்பேசி எண்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










