தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

News image

இந்திய வெளியுறவு அமைச்சகம்

Updated On :4 ஜூன் 2026, 4:22 am IST

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவா்களுக்கு இந்தியா சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவா்களுக்கு தலா ரூ. 7,500 மாதாந்திர கல்வி உதவித் தொகைகளை இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா வழங்கினாா்.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவா்களுக்கான கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் கல்வியில் தலைசிறந்து விளங்கும் 100 நலிந்த பிரிவு மாணவா்களுக்கு இந்தியா சாா்பில் மாதம் ரூ. 5,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, இலங்கை மாணவா்களுக்கான மாதாந்திர கல்வி உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

அதன்படி, கடந்த 2025-26-ஆம் ஆண்டுமுதல் 100 முதலாமாண்டு மாணவா்களுக்கு மாதம் ரூ. 7,500-ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடிக்கும் வரை மாணவா்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.