புதிய சாதனை
டி20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.


டி20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் திகழும் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 264 ரன்களை விளாசி அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனை, உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தவர் என்ற பல்வேறு சாதனைகளும் இதில் அடங்கும்.
தற்போது விராட் கோலி விலகியதால், இந்திய ஒரு நாள் மற்றும் டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடர்களில் எதிரணிகளை முழுமையாக வீழ்த்துவது ஒயிட்வாஷ் எனப்படும். ஒரு தொடரில் இடம்பெறும் அனைத்து ஆட்டங்களையும் வெல்வது ஒயிட்வாஷ் ஆகும். அதுபோல் ஏற்கெனவே கடந்த 2017-இல் இலங்கையை அணியையும், 2018-இல் மே.இந்திய தீவுகளையும், 2021-இல் நியூஸிலாந்து அணிகளை ஒயிட்வாஷ் செய்தார்.
தற்போது அண்மையில் நடைபெற்ற மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்து புதிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
பாகிஸ்தான் சர்பராஸ் அகமது (5), ஆப்கானிஸ்தான் அஷ்கர் ஆப்கன் (4) ஆகியோருக்கு பின் இந்த சாதனையை செய்துள்ளார் ரோஹித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...