கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பசுமை வளர்ப்பில் பட்டதாரிகள்

இன்றைய இளைய தலைமுறை, பொழுது போக்கு என்ற பெயரில் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மரங்களை நடும் பணியில் வடசென்னையைச் சேர்ந்த

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

வனராஜன்

இன்றைய இளைய தலைமுறை, பொழுது போக்கு என்ற பெயரில் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மரங்களை நடும் பணியில் வடசென்னையைச் சேர்ந்த பட்டதாரிகள் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இயற்கையை நேசிக்கும் இவர்கள் 30 பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். வட சென்னையைப் பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை 500 மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். ஆயிரம் மரங்கன்றுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்கள்.

மரக்கன்று நடும் குழுவிலுள்ள கல்லூரி மாணவி ஜெனிஷாவிடம் பேசினோம்:

""வட சென்னையைப் பொருத்தவரை சமீப காலமாக இங்குள்ள மரங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக வெட்டப்படுகின்றன. இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறை செல்போன், சமூகவலைத்தளங்களில் காட்டும் அக்கறையை இயற்கை மீது காட்டுவதில்லை. நான் பள்ளியில் படிக்கும் போதே சாரணியர் இயக்கத்தில் சேர்ந்து முடிந்தளவு சமூக சேவை செய்து வருகிறேன். அந்த சமூக சேவையின் மற்றொரு வடிவம் தான் இந்த மரக்கன்றுகளை நடுவது. மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மறக்காமல் தண்ணீர் விடச் சொல்கிறோம். வாரம் ஒரு முறை சென்று பார்த்து பராமரித்து வருகிறோம். கம்பி வேலி அமைத்துக் கொடுக்கிறோம். வரும் காலங்களில் வட சென்னை மட்டுமல்ல அனைத்து பகுதிகளிலும் எங்களுடைய இந்த பசுமை வளர்ப்பு சேவை தொடரும்'' என்கிறார்.

பட்டதாரிகளின் இந்த சமூகப்பணியை தொடங்கி அவர்களுக்கு உதவி வரும் நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பின் தலைவர் தூயவனிடம் பேசினோம்:

""இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களிடம் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும். வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. அவர்களிடம் இயற்கை நேசிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களுடைய நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பு. இதற்காக பள்ளியில் படிக்கும் போதே மாணவர்களிடம் சமூகம் சார்ந்துபணிகளை ஆரம்பித்து விடுகிறோம். பட்டதாரிகளாக ஆகும் போது அவர்கள் தானாக முன் வந்து இதுபோன்ற மரக்கன்றுகளை நடுதல், மரங்களை வளர்த்தல், முதியோர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை எங்கள் வட சென்னை பகுதிகளில் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். எங்களுடன் இந்த சமூகப்பணியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

இந்த முறை கொங்கு, மகிழம், அசோகா, கொய்யா போன்ற காற்று அதிகம் தரும் மரங்களை நட்டு இருக்கிறார்கள். கனிகளை தரும் மரங்களையும் தொடர்ந்து நட்டு வருகிறார்கள். வளர்ந்த மரம் ஒன்றை வாங்குவதற்கு நூறு ரூபாய் வரை செலவாகிறது. மரக்கன்றுகள் 30 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இதற்காக நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. எங்கள் சமூக நல அமைப்பை சேர்ந்தவர்கள் தரும் நிதியை வைத்து தான் இந்த பசுமைப்பணி மட்டுமல்லாமல் பிற பணிகளையும் செய்து வருகிறோம்'' என்றார்.

இருப்பிடம் போதும் - இயற்கை வேண்டாம்: ""இயற்கை தான் முதல் கடவுள். அன்றாடம் நாம் சுவாசிக்க உதவும் காற்றைத் தரும் மரங்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் இப்போதுள்ள குடியிருப்பு வாசிகள் எங்களுக்கு இருப்பிடம் போதும் என்று மரங்களை வெட்டி விட்டு வீடாக கட்டி விடுகிறார்கள். வட சென்னையில் இப்படியாகப் பல பகுதிகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுப் பிளாக்குகளாக மாறிவிட்டன.

இந்த நிலை மாற வேண்டுமானால் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வட சென்னைப் பகுதியில் இதுவரை 500 மரங்களை நட்டு நாங்களே பராமரித்து வருகிறோம். அரசாங்கம் எங்கள் சமூகப்பணிக்கு உதவ வேண்டும். நாங்கள் நட்டு வைத்த மரங்களைப் பராமரிக்க விட்டாலே போதுமானது. ஆனால் சாலை அமைக்கிறோம், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். ஆகையால் பசுமை வளர்ப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்'' என்கிறார் நம்பிக்கை சிகா சமூக அமைப்பின் இணைச் செயலாளரான ஆர்.ராஜலெட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.