கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பாராட்டுப் பாமாலை!  38: பளிச்சென இப்போது இருக்கிறது! 

அமெரிக்காவில் "கிரீன் உட்'  கிராமம்அங்கே படிக்கும் "க்ரித்திக் ரமேஷ்'அங்கிருந்து இந்தியாவிற்கு 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:52 am

வனராஜன்

அமெரிக்காவில் "கிரீன் உட்'  கிராமம்
அங்கே படிக்கும் "க்ரித்திக் ரமேஷ்'
அங்கிருந்து இந்தியாவிற்கு 
ஆவலுடனே பறந்து வந்தான்!

தாத்தா படித்த பள்ளியைப் பார்க்க..- பார்த்துத்
தவித்தான்!... அதன் நிலை கண்டு!
அழுது வடிந்தது அந்தப் பள்ளி 
அடிப்படை வசதிகள் கூட  இல்லை!

பள்ளியைச் சீர் செய்ய நினைத்தான் 
பலரிடம் கலந்து ஆலோசித்தான்!
அதற்கு செலவுபல் லாயிரமாகும்!
அவனுக்கு ஒரு யோசனை வந்தது!

அறிவியல் போட்டியில் வென்ற பணத்தை
அன்பளிப்பாக கொடுக்க முன் வந்தான்
அனைவரும் அன்புடன் பாராட்டினரே!
அதுமட்டுமல்ல... கேட்பீர் இன்னும்! 

சூரிய சக்தியில் மின்சார அமைப்பை - க்ரித்திக்
அங்கே உண்டாக்கிக் கொடுத்தான்.
அதனால்  கிடைத்தது பல பயன்கள்
அளவுக்கு போக மீதி மின்சாரத்தை

பள்ளி, விலைக்குக் கொடுத்ததுவே! 
அதனால் கிடைத்தது பல வசதி!
தூய்மை, வசதி பெற்ற பள்ளி
பளிச்சென இப்போதிருக்கிறது!

அகவையவனுக்குப் பதினாறு!
அவன் அன்புக்கிங்கு இணையேது!
அரசுப்பள்ளிக் கூடங்களுக்கு 
ஆதரவளிக்க இப்போது 

ஆரம்பித்தான் ஒரு அமைப்பு! - அதன்
மூலம் பல செயல் புரிகின்றான்!
அனைவரும் க்ரித்திக் சேவைதனைப் 
பாராட்டி ஆதரவளிப்போமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.