/

கேரட் துவையல்

சுவையான கேரட் துவையல் செய்வது எப்படி?

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

கேரட்- 300 கிராம்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - ஒரு மூடி

எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி

கடுகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 1 பிடி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு தாளிக்க வேண்டும். துருவிய கேடர், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, தேங்காய்ப் பூ, கறிவேப்பிலையை சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர், அவற்றுடன் தாளித்த பொருள் உள்ள வாணலியில் சேர்த்து வதக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து எடுத்து வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.