லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பீன்ஸ் தேங்காய்த் தொக்கு

தேங்காயைத் துருவி கெட்டியாகத் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

News image

பீன்ஸ் தேங்காய்த் தொக்கு

Updated On :3 ஆகஸ்ட் 2024, 4:39 pm

தேவையான பொருள்கள்:

பீன்ஸ் 400 கிராம்

இஞ்சி 1 துண்டு

பூண்டு 2 பற்கள்

வெங்காயம், தக்காளி, பச்சை

மிளகாய் தலா 2

தேங்காய்ப் பால் 2 மேசைக் கரண்டி

சர்க்கரை 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி கெட்டியாகத் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் தோலை நீக்கி விழுதாக அரைக்கவும். பீன்ஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாகப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கியவுடன் அவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும்.

அடுத்து உப்புத் தூள், சர்க்க்ரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும். சிறுதீயில் இரு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பீன்ஸ் வெந்தவுடன் தேங்காய்ப் பாலை விட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.