தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 500 கிராம்
வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு
கடலை மாவு - 100 கிராம்
கெட்டித் தயிர் - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த் தூள், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, அரைத்த பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடை மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு மணிநேரம் கழித்து சப்பாத்திகளாகத் தேய்த்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






