மீண்டும் "மீ டூ': குமுறும் லட்சுமி மஞ்சு!
இங்கே நடிகர் ரஜினி எப்படியோ.. அதுபோன்று தெலுங்குப் படவுலகில் நடிகர் மோகன் பாபு. "தலப்பாக்கட்டு' நடிகர்.


இங்கே நடிகர் ரஜினி எப்படியோ.. அதுபோன்று தெலுங்குப் படவுலகில் நடிகர் மோகன் பாபு. "தலப்பாக்கட்டு' நடிகர்.
மோகன் பாபுவின் ஒரே மகள் லட்சுமி மஞ்சு. ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று பல மொழி நடிகை. திரைப்படங்கள், டிவி தொடர்கள் தயாரிப்பவர். ஐந்து வயதிலேயே நடிக்க ஆரம்பித்தவர். லட்சுமியின் சகோதரர்களும் நடிகர்கள். ஆக குடும்பத்தில் அனைவரது ரத்தத்திலும் சினிமாதான்.
இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ) திரை உலகில் பாலியல் தொல்லை குறித்து பெரும் பிரச்னை. நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் பாலியல் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது என்று நீறு பூத்த நெருப்பாக இருக்கும் "மீ டூ' விவகாரத்தை மீண்டும் ஊதிக் கிளப்பியுள்ளார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரும், மிகப் பெரிய நடிகருமான மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு இப்படி அதிரடியாகச் சொல்லியிருப்பது திரைப்படவுலகில் அதிர்ச்சிகளை அவிழ்த்துவிட்டிருக்கிறது. பல புருவங்கள் "பெரிய நடிகரின் மகளுக்கு கூட பாலியல் வன்முறையா' என்று உயர்ந்துள்ளன. லட்சுமி மஞ்சுவின் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன.
""பெரிய நடிகரின் மகளான நானும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டிவரும் என்று நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரிய நடிகரின் மகள் என்பதால், எனக்கு அப்படி நடக்காது என்றுதான் நினைத்தேன். பெண்கள் பாலியல் தொல்லைகளை வாழ்க்கையின் பல நிலைகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எந்தத் துறையானாலும் சரி..
ஆம். நானும் பாலியல் தொல்லைகளை எதிர் கொண்டுள்ளேன். தொடக்கத்தில் "நான் பெரிய நடிகரின் மகள். தவிர ஐந்து வயதிலிருந்தே சினிமா துறையில் இருக்கிறேன். அதனால் எனக்கு அதுநிகழாது என்று நினைத்தேன். இங்கே யாரும் உத்தமர்கள் அல்ல. இதைச் சொல்ல எனக்கு இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவந்திருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...